பிரித்தானியா சிறுமிக்கு எகிப்தில் நேர்ந்த துயரம்..

எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியா சிறுமி, ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்சி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கியா வாட்சன் என்ற 4 வயது சிறுமியே எதிர்பாராத விதமாக நீச்சில் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உறவினருடன் எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற ஸ்கியா மற்றும் அவரது 11 வயதான சகோதரி லிஸ்டாஸியா, ஹுர்கடாவில் உள்ள சீகல் பீச் ரிசார்ட் தங்கி உள்ளனர்.

அப்போது, நீச்சல் குளத்திற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த ஸ்கியா, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்ததில், சிறுமியின் தலை குளத்தின் தரையில் பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

உறவினரின் கதறல் சத்தம் கேட்டு உடனே வந்த பாதுகாப்பு ஊழியர்கள், நீச்சல் குளத்திலிருந்து சிறுமியை மீட்டு, சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளனர். எனினும், அது பலன் அளிக்காததால் ஸ்கியா உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு ஊழியர்கள் தாமதமாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனினும், நட்சத்திர ஓட்டல் மேலாளர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். உறவினர்கள் குழந்தையை சரியாக கண்காணிக்காததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.