பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு.!!

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து டோனி ஓய்வு பெறவில்லை என்றால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது அரிதான ஒன்று என்று கூறப்படுகிறது.

டோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் அணி சிறப்பாக விளையாடி வந்தார் உலக கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதற்கு தோனியின் ஆட்டம் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பலர் கருத்து கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் தோனிக்கு ஆதரவாகவும் முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை கூறி வந்தனர்.

இதற்கிடையே உலக கோப்பை தொடர் முடிந்த முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என கூறப்பட்டன ஆனால் தோனி ஓய்வு பற்றி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவர் 2020 இல் நடக்க இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் அவர் விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. அவராக ஓய்வு முடிவை வெளியிட வில்லை என்றால் இந்திய கிரிக்கெட் வாரியம் இனி அடுத்தடுத்த தொடர்களில் அவரை தேர்வு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு வழி விட்டு தோனி ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் உலக கோப்பையின் தோனியின் ஆட்டத்தை பார்த்தால் நிறைய இடத்தில் தடுமாறி விளையாடுவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தோனியிடம் விரைவில் பேச உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.