ரகசியமாக அதிரடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். என்னமா இப்புடி பண்றீங்களே மா என்ற அவரின் டையலாக் படத்தில் பாடலாகவே வந்துவிட்டது.

குடும்ப பிரச்சனைகளை டிவி முன்பு பேசி தீர்வளிப்பது போல சென்ற இந்நிகழ்ச்சிக்கும் பல எதிர்ப்புகளும் வந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பு, படம் இயக்குதல் என இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது டிவிட்டரில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? சீசன் 1 சூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் என அவர் சற்று புதிர் போல கூறியுள்ளார். இதனால் சொல்வதெல்லாம் உண்மையின் தொடர்ச்சிய இந்த நிகழ்ச்சி என்ற குழப்பம் எழுந்துள்ளது.