கடைசியில் விஜய் சேதுபதியும் இப்படி மாறிவிட்டாரே!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். அவரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

தமிழ் சினிமாவில் விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு தான் ஹேட்டர்ஸே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ஏனெனில் இவரின் எளிமை தான் இதற்கு முக்கிய காரணம், ஆனால், லாபம் படத்தில் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிக்கு பவுன்சர் எல்லாம் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளாராம்.

விஜய் சேதுபதியும் அந்த பவுன்சர்களுடன் வர, அட என்னயா இவரும் இப்படி ஒரு கலாச்சாரத்தில் மாட்டிக்கொண்டாரே என கூறி செல்வதாக ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.