சில நாட்களாகவே சென்னையில் இருந்த தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் எல்லம்மன் மாவு கடை உரிமையாளர் ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் ஒரு கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம் என்பது தான். ஏற்கனவே தண்ணீருக்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்ற சந்தோஷத்தை இது தருகிறது.
கடை உரிமையாளர், கடையில் வேலை செய்பவர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி பர்மிஷன் கேட்கின்றனர். அப்போதுதான் இந்த திட்டம் குறித்து யோசனை எனக்கு தோன்றியது. என தெரிவிக்கிறார். மக்களும் இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கின்றனர்.
மேலும், கடை உரிமையாளர் என்ன தான் இது வியாபாரமாக இருந்தாலும், இது ஒரு எதிர்காலம் சார்ந்த பிரச்சனை. இந்த நிலை தொடர கூடாது” என அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.






