முச்சதம் அடித்து சாதனை படைத்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள் தோழி தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான கருண் நாயர், 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆரம்பித்தார். அந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அதிவேகத்தில் முச்சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கருண் நாயர், தன்னுடைய நீண்ட நாள் தோழியான சனயா டங்கரிவாலாவிடம் காதலை கூறியுள்ளார்.
She said ‘YES’❤️? pic.twitter.com/BhiiSUp8zt
— Karun Nair (@karun126) June 29, 2019
அதனை அவரும் ஏற்றுக்கொண்டதாக ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விரைவில் கருண் நாயரும் திருமண திகதியினை அறிவிப்பார் என அவருடைய ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.






