நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.!!

இந்த உலகம் முழுவதும் அவ்வப்போது எதிர்பாராத பல விதமான அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அவாப்ட்டது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு., மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில்., சீன நாட்டில் உள்ள சிசுவான் மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.55 மணிக்கும்., இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களும் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகவும்., அதற்கு பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகவும் பதிவானது. நிலநடுக்கத்தை அறிந்த மக்கள் பதறியபடி வீதிகளுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிறிய அளவிலான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்த மக்கள் உடனடியாக வெளியே வர இயல்ததால் சுமார் 11 பேர் பரிதாபமாகி பலியானார்கள். சுமார் 122 பேர் படுகாயமடைந்த நிலையில்., சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்., சீனாவை தொடர்ந்து ஜப்பானிலும் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கும் நிலையில்., தற்போது சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து., ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தீடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாகவும்., இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் அந்நாட்டு அரசால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டும்., மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.