இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் நேற்று 24 வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கேப்டன் அதிரடி ஆட்டத்தால் தான் அந்த அணியால் இவ்வளவு ரன்கள் குவிக்க முடிந்தது. அவர் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சர்களுடன் 148 ரன்கள் விளாசினார். இதில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியில் இங்கிலாந்து அணி பல உலக சாதனையை படைத்தது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சர்களுடன் 148 ரன்கள் விளாசினார். 17 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் மோர்கன் படைத்துள்ளார்.
இந்தநிலையில், இதற்கு முன் ஹிட்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 சிக்சர்களும், 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 சிக்சர்களும், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 16 சிக்சர்களும் அடித்திருந்தனர். தற்போது மோர்கன் 17 சிக்சர் அடித்ததன் மூலம் அந்த மூன்று ஜாம்பவான்களின் சாதனையை மோர்கன் முறியடித்துள்ளார்.