காதலித்து ஏமாற்றிய காதலன்.. இளம்பெண் செய்த கொடூர செயல்!

டெல்லியில் வாலிபர் ஒருவர் இள்மபெண்ணை காதலித்துவிட்டு திருமணத்திற்கு மற்உப்பு தெரிவித்ததால் குறித்த இள்மபெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விகாஸ்பூரி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு இளம்பெண்ணும், இளைஞர் ஒருவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது. காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காதலன் மீது ஆசிட் வீசியதும் போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிட் வீச்சில் அந்த இளைஞனுக்கு முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் அந்தப் பெண்ணுக்கும் கைகளில் காயம் இருந்தது.

இதையடுத்து அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.