பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் இளம் பெண் அங்குள்ள பகுதிகளில் வீட்டின் சமையலுக்கு தேவையான விறகுகளை சேகரிக்க சென்றுள்ளார்.
அந்த சமயத்தில்., அந்த பெண் மற்றும் தனது உறவினர் பெண்களுடன் சென்றுள்ள நிலையில்., அந்த பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள்., சாலையில் சென்ற பெண்களிடம் வலுக்கட்டாயமாக ஆபாசமாக பேசி., ஆடைகளை இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர் பெண்., காம கொடூர எண்ணத்தை கொண்ட கொடூரர்களிடம் சண்டைக்கு சென்று., அனைவரையும் கட்டையால் அடித்து துவைத்தெடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இளைஞர்கள் ஊர் பஞ்சாயத்தாரிடம் கூறவே., ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் பெண்களை இழிவாக பேசி., அவர்களின் நடத்தையை தரம் தாழ்த்தி விமர்சித்து., பெண்களின் குடும்பத்தார்க்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது இதனை எதிர்த்து கேட்ட பெண் தரப்பு நபரை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவமானது தற்போது வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரத்தின் உச்சகட்டமாக பெண்களின் முடியை வெட்டி எரிந்து., பெண் என்றும் பாராது அடித்து உதைத்துள்ளனர்.






