நடிகர் விஷாலை கிழித்த நடிகை ராதிகா சரத்குமார்.!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கர்தாஸ் அணியும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு செய்திருந்தார். இதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நடிகை ராதிகாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த தேர்தலில் நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை இதுவரை நிறைவேற்றி இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். நீங்கள் கொடுத்த புகார்களை விசாரணையில் இருக்கும்போது முன்சொன்ன பொய்யை மீண்டும் சொன்னால் உண்மையாகி விடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு நீதிமன்ற வாசலில் நிற்கிறீர்கள். நீங்கள் நீதிமான் போன்ற வீடியோ வெளியிட அருகதை உண்டா எனும் கடுமையாக விமர்சித்துள்ளார்.