சிகிச்சை பெற வந்த பெண்ணை சீரழித்த அப்பலோ மருத்துவமனை ஊழியர்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு இணையத்தளத்தில் சிறந்த மருத்துவர் குறித்த தேடல் செய்யவே., சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்துள்ளார்.

இதனை அறிந்த அவர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னையில் உள்ள பெருங்குடி அப்பலோ மருத்துவமனைக்கு வந்த நிலையில்., கடந்த நான்காம் தேதியன்று சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து., கடந்த ஆறாம் தேதியன்று சிகிச்சையை செய்ய துவங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில்., பெண்ணின் இடுப்பிற்க்கு கீழுள்ள பகுதிகள் தற்காலிகமாக உணர்வை இழக்கும் வகையில் மருந்துகளை செலுத்திய நிலையில்., செயற்கை சுவாச கருவியை பொருத்தி சிகிச்சையை துவங்கியுள்ளனர். இந்த நேரத்தில்., அறுவை சிகிச்சையை பெண் காணக்கூடாது என்பதற்க்காக திரையினை இடுப்பு பகுதியில் இட்டு சிகிச்சையை துவங்கியுள்ளனர்.

இந்த சமயத்தில்., பெண்ணின் முகத்திற்கு அருகில் நின்று கொண்டு இருந்த பணியாளர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். முகத்தில் அறுவை சிகிச்சையின் போது சுவாச கருவி மாட்டப்பட்டு இருந்ததை அடுத்து., பெண்ணால் யாரிடமும் அந்த நேரத்தில் கூற இயலவில்லை. சிகிச்சை முடிந்ததும் இது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்த நிலையில்., அவர்களும் ஏதும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து இணையம் மூலமாகவே சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., இது குறித்து காவல் துறையினர் விசாரணைக்கு வந்துள்ளனர். இந்த நேரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூறியுள்ளனர். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிந்த போக்குவரத்து காவலர்களை கொண்டு விசாரணை செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த பிரச்சனை குறித்தும் இணையத்தின் மூலமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., துரைப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில்., மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மனநலம் பாதித்த பெண் என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர்., சிகிச்சைக்கான அறிக்கையை பெற்று சோதனை செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மூட்டு வலிக்காக அறுவை சிகிச்சை பெற்றுவந்த தகவல் உறுதியானதை தொடர்ந்து., பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில்., மருத்துவமனை ஊழியர் சிகிச்சை நடைபெறும் சமயத்தில் அருவருக்கத்தக்க வகையில் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து., மருத்துவமனை ஊழியரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சார்ந்த டில்லிபாபுவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.