நிபா வைரஸ்.! அடுத்தடுத்து 47 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மக்களை திடீரென தாக்கிய நிபா வைரஸின் காரணமாக மருத்துவமனை ஊழியர் உட்பட சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்ததை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில்., சென்ற வருடத்தை போன்றே மீண்டும் நிபா வைரஸ் பரவ துவங்கியதை தொடர்ந்து., கொச்சி பகுதியை சார்ந்த கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸின் தாக்கம் இருப்பதை அறிந்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸின் தாக்கத்தை அறிந்ததை அடுத்து மாணவரின் உறவினர்கள்., நண்பர்கள் என அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 47 பேருக்கு நிபா வைரஸின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் உடனடியாக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ள மருத்துவர்கள்., தேவையான சிகிச்சைகளை அளித்து தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிபா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு தேவையான அறிவுரைகளை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில்., கேரள மாநிலம் முழுவதும் நிபா வைரஸின் தாக்கத்திற்கான அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு., காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக கூறி அறிவுறுத்தப்பட்டுள்ளது.