காம கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி.!!

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆள்வார் மாவட்டத்தில் உள்ள ரேவாளி பகுதியை சார்ந்தவன் ராஜ்குமார். இவன் கடந்த 2015 ம் வருடத்தில்., அதே பகுதியை சார்ந்த சுமார் 5 வயதுடைய சிறுமியிடம்., மிட்டாய் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

காம கொடூரனின் பேச்சில் உள்ள கொடூர எண்ணத்தை அறியாத குழந்தை கொடூரனுடன் செல்லவே., சிறுமியை கொடூர முறையில் பாலியல் பலாத்காரம் செய்து., துடிதுடிக்க கொலை செய்து உள்ளான்.

சிறுமியை காணாது தேடி அலைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இது குறித்த மேற்கொண்ட விசாரணையில்., சிறுமி ராஜ்குமாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு., கொலை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிக்கு முன்னிலையில் வந்தது. இன்று இறுதியாக இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி., காம கொடூரனுக்கு மரண தண்டனையை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.