இந்தியாவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை மணக்க வேண்டும் என்பதற்காக அவரின் 9 வயது மகளை கடத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் கமலேஷ் (28). இவர் கடந்த ஞாயிறு மதியம் 9 வயது சிறுமியை கடத்தி சென்றார்.
இதையடுத்து அந்த சிறுமியின் தாய் தன் மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் மூன்று நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் சிறுமியை பொலிசார் நேற்று பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து கமலேஷ் கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிசார் கூறுகையில், சிறுமியின் தாயை அவரின் கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்டு விட்டார்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த பெண் வீட்டில் உள்ள மேற்கூரையில் ஏற்பட்ட கசிவை சரி செய்ய கமலேஷ் அங்கு வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணை அவருக்கு பிடித்து விட்டதோடு, கணவரை பிரிந்து வாழ்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டார்.
பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கமலேஷ் அப்பெண்ணிடம் வற்புறுத்திய நிலையில் அவர் சம்மதிக்கவில்லை.
இதையடுத்தே அப்பெண்ணை மிரட்டி சம்மதிக்க வைக்கும் நோக்கில் அவர் மகளை கடத்தி சென்றார் என கூறியுள்ளர்.






