தமிழகத்தில் தங்களை ஏமாற்ற நினைத்த ஆட்டோ டிரைவரை போட்டி போட்டு இரு காதலிகளும் கரம் பிடித்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி காணாமல் போனதாக அவரின், தந்தை தாராபுரம் பொலிசில்புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர்.
இந்த நிலையில் காணாமல் போன சுந்திரி தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு வாலிபருடன் நின்று கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணையும், அவருடன் இருந்த வாலிபரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
இந்நிலையில், அந்த வாலிபருடன் இருந்த மற்றொரு பெண் தன்னையும் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டு வண்டியில், ஏறிக் கொண்டார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும் அவர் ஆட்டோ டிரைவர் என்றும் தெரியவந்தது. அவருடன் வந்த 2 பெண்களும் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தனர்.
மேலும், திருமணம் ஆகாத ஆட்டோ டிரைவரான சுரேஷ், முதலில் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த 25 வயது பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்த காதல் ஒரு புறம் இருக்க மறுபுறம் அதே பகுதியை சேர்ந்த சுந்திரி என்ற மற்றொரு இளம் பெண்ணுடன் ஆட்டோ டிரைவர் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவரின் , உண்மை நிலை தெரிய வந்தது.
இதனை அடுத்து இரு காதலிகளுக்கு, ஆட்டோ டிவைரை யார் திருமணம் செய்து கொள்வது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகளை சாமர்த்தியமாக சமாளித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகள் இருவரையும் கழட்டிவிட முடிவு செய்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட பெண்கள், சுரேஷ்-யை இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்த முடிவை இருவரும் சேர்ந்து ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்தபோது அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனே காதலிகளின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்த ஆட்டோ டிரைவர் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி பழனிக்கு சென்றனர்.
அங்குள்ள ஒரு கோவில் முன்பு ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து பேருந்து மூலம் வேறு இடத்திற்கு செல்ல திட்டமிட்ட மூவரும் பிடிபட்டுள்ளனர்.
அதையடுத்து போலீசார் காதலர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பேச்சுவார்த்தையில், 2 பெண்களும் காதல் கணவரான ஆட்டோ டிரைவரருடன் தான் சேர்ந்து வாழ்வோம் என்று பிடிவாதமாக இருந்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காதலர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. போலீசார் வேறு வழியின்றி 2 பெண்களையும், காதல் கணவரான ஆட்டோ டிவைருடன் அனுப்பி வைத்தனர்.