முதல் போட்டியிலேயே அதிரடியாக இறங்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல்.!

இங்கிலாந்தில் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் வரும் 7-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றது.

இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட அணி என்றால் அது நம் இந்திய அணி தான். ஒரு சில அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை.

இந்நிலையில் நாளை தென்னாபிரிக்காவுடன் நடைபெறும் போட்டியில் தான் இந்திய அணி, இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியை தொடங்கியது. இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு உள்ள சௌவுதம்டவுனில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கும் வாய்ப்பு உள்ள இந்திய அணி வீரர்களை உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல். ராகுல் அல்லது விஜய் சங்கர், தோனி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ் குமார், பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் சாஹல்.