ஆற்றில் மூழ்கிய சுற்றுலா பயணிகளின் படகு: பயணிகளின் நிலை என்ன?

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் புயல் மழையில் சிக்கி சுற்றுலா பயணிகளின் படகு ஒன்று கவிழ்ந்ததில் 7 பேர் மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

புடாபெஸ்ட் நகரில் அமைந்துள்ள டான்யூப் ஆற்றிலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 33 பயணிகளும் 2 படகு ஓட்டுனர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதில் 7 பேர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாகவும், 16 பேர் மாயமானதாகவும் கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் 33 பேரும் தென் கொரிய நாட்டவர்கள் என கூறப்படுகிறது. புடாபெஸ்ட் நகரில் கடும் புயல் மழை அடித்து ஓய்ந்திருந்த நிலையிலேயே சுற்றுலா பயணிகளின் படகு டான்யூப் ஆற்றில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி புயல் காரணமாக பெரும்பாலான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாயமான சுற்றுலா பயணிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, புயல் மற்றும் மழை காரணமாக டான்யூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மீட்பு நடவடிக்கைகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.