மீண்டு வா நேசா! வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்

#Pray_for_neasamani என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

தேசிய அளவில் நடிகர் வடிவேலு குறித்த #Pray_for_neasamani என்ற ட்வீட் டிரெண்டாகி வருகிறது. நகைச்சுவையாக பதிவிடப்பட்ட இந்த ட்வீட்டை பலரும் குறிப்பிட்டு, தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பிரபலங்கள் பலரும் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழில் ட்வீட் செய்து இணையத்தில் வைரலாகும் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங்கும், மீண்டு வா நேசா என நகைச்சுவையாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுவும் தற்போது வைரலாகி வருகிறது. அவரது ட்வீட்டில், ‘என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்.. ட்ச்! மீண்டு வா நேசா!’ என தெரிவித்துள்ளார்.