துணைவர்களை கொல்ல முயன்ற காதலர்கள்!

கனடாவில் காதலர்கள் இருவர், தத்தம் துணைவர்களை கொல்ல திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், முக்கிய ஆதாரத்தையே நீதிபதி நிராகரித்ததையடுத்து அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

Curtis Veyயும் Angela Nicholsonம் தத்தம் துணைவர்களை கொல்ல முயற்சிப்பதாக Curtisஇன் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதை எப்படியாவது நிரூபிப்பதற்காக ஆதாரம் ஒன்றை தேடினார் Curtisஇன் மனைவியான Brigitte.

கணவனுக்கு தெரியாமல் அவரது அறையில் ஐபாட் ஒன்றை ஆன் செய்து மறைத்து வைத்தார் Brigitte.

அவர் எதிர்பார்த்தது போலவே ஒரு நாள் மெல்லிய குரலில் பல விடயங்களை பேசிக்கொண்டார்கள் Curtis Veyயும் Angela Nicholsonம். அந்த ஐபாடை தனது மகனுக்கு காட்டினார் Brigitte.

உடனடியாக இருவருமாக பொலிசாரை அழைக்க, பொலிசார் அந்த ஐபாடை கைப்பற்றியதோடு Curtis மற்றும் Angelaவை கைது செய்தனர்.

2016இல் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்ட இருவரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி 2016 தீர்ப்பில் தவறுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

முக்கியமான ஆதாரமாக கருதப்பட்ட ஐபாடை நிராகரித்த அவர், ஒருவருக்கு தெரியாமல் அவரது உரையாடலை பதிவு செய்வது தனியுரிமை மீறலாகும் என்று தெரிவித்ததோடு அந்த ஐபாடை பொலிசார் கைப்பற்றியது மிக மோசமான குற்றம் என்று அதிரடியாக அறிவித்தார்.

ஐபாட் தவிர வேறு ஆதாரம் எதுவும் இல்லாததையடுத்து நீதிபதி குற்றம் சாட்டப்படவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பைக் கேட்ட Brigitteம், தீர்ப்பு குறித்து தனக்கு வருத்தமில்லை என்றும், அவர்கள் தன்னையோ Angelaவின் கணவரையோ எதுவும் செய்யவில்லை, அதனால் வழக்கு சமாதானமாக முடிந்ததில் மகிழ்ச்சிதான் என்றும் தெரிவித்தார்.