காதலித்து திருமணம் செய்து கொண்ட திருநங்கையின் வேதனை பக்கம்!

தமிழகத்தைச் சேர்ந்த அருணம்மா என்ற திருநங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின் கணவரின் சில ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாததால், பிரிந்ததாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

எல்லாருக்கும் காதல் என்பது பொதுவான் ஒன்று தான், அதுபோலவே தான் எனக்கும் காதல் வந்தது.

புனேவில் என்னைப் போன்ற திருநங்கை சமூகத்தினருடன் சேர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுட்டு இருந்தேன். என்னுடைய 21 வயதில் முழு திருநங்கையாக மாறியிருந்த போது, அவரை ஒரு திருவிழாவில் பார்த்தேன்.

அவர் சென்னையில் பிசினஸ் செய்து கொண்டிருந்தார். இருவரும் தொலைபேசி வழியாக பேசினேன்.

முதலில் நண்பர்களாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவருக்கு என்னை பிடித்துவிட்டதால், காதலைக் கூறினார்.

நல்ல குடும்பம், கெட்ட பழக்கம் இல்லாத பையன். அதுமட்டுமல்லாமல் என்னை நேசிக்கிறவர் இதுக்கு மேல என்ன வேண்டும் என்று நானும் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டேன்.

ஐந்து வருடங்களாக காதலித்து வந்தோம். அதன் பின் ஒருகட்டத்தில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.

நான் திருநங்கை என்பது அவருக்கு மட்டுமே அவருடைய குடும்பத்தினருக்கு தெரியாது. திருமணத்திற்கு பின்பும் எங்கள் வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒராண்டு வரை சந்தோஷமாக இருந்தோம், நாட்கள் செல்ல செல்ல எங்களின் மகிழ்ச்சி குறைய ஆரம்பித்தது.

அதற்கு காரணம், அவருக்குன்னு சில ஆசைகள் இருக்கும். என்னால் அதைப் பூர்த்தி செய்ய முடியமல் போனது. அதே மாதிரி அவரால் சில விஷயங்களில் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதனால் இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டோம். நாங்கள் பிரியும் வரை அவரின் விட்டிற்கு நான் திருநங்கை என்பதே தெரியாது.

அதன் பின்னரே அவர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து அவர் சில ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்தார்.

அவர் வீட்டின் வற்புறுத்தலின் பேரின் திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது குழந்தைகள் இருக்கின்றன.

எப்போதாவது அவரை பார்ப்பேன், சில நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவேன், அது எல்லாம் ஒரு காலம், ஆனால் இப்போது அதற்கு நேரம் இல்லை.

எனக்கு ஆதரவு என்றால் அது என் திருநங்கை சமூகம் மட்டும்தான். அவர்களுக்காவே ஓடி கொண்டு இருக்கிறேன்.

இந்த ஓட்டத்தில் காதல், கல்யாணம் எதுக்கும் நேரமுமில்லை. அவரை நேசிச்ச இந்த இதயத்தில் வேறு யாருக்கும் இடமுமில்லை.

திருநங்கைகளைப் பொறுத்தவரைக்கும் காதலும் சரி, கல்யாணமும் சரி அவங்க வாழ்க்கையில் ஓர் அனுபவம். என் காதல் எனக்கு ஒரு அனுபவம் என கூறியுள்ளார்.