விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை அடுத்துள்ள ஓங்கூரில் வசித்து வருபவரின் பெயர் செல்வமணி (வயது 40). காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சூணாம்பேடு இவரது சொந்த ஊராகும். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில்., மனைவியை பிரிந்து வந்த இவர்., தான் ஒரு சாமியார் என்று கூறி பிழைப்பை நடத்தி வந்துள்ளார்.
மக்களை அதிகளவு ஆன்மீக பேச்சால் கவர்ந்து வந்த நிலையில்., இவரின் பேச்சுக்களை நம்பிய மக்கள் இவரை போற்றி புகழ்ந்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., வீட்டில் இருக்கும் பில்லி – சூனியத்தை நீக்குவதாக கூறி அங்குள்ள வீடுகளுக்கு சென்று., அங்கிருக்கும் பெண்களை கவர்ந்து., தன்வசமாக்கி குடும்பம் நடத்தியும் வந்துள்ளான்.
பின்னர் சில நாட்கள் கழித்த பின்னர் அவர்களை ஏமாற்றி., மற்றொரு பெண்ணை தேடி சென்று வந்துள்ளான். இந்த நிலையில்., தற்போது மதுரையை சார்ந்த பெண்ணுடன் வசித்து வருகிறான். இந்த நேரத்தில்., கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த நபர்., தனது மகனின் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனை ஏற்ற அவர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததில்., அவர்ளுக்கு சுமார் 18 வயதுடைய மகள் இருப்பதை அறிந்துள்ளார். இதனையடுத்து நீங்கள் ஊருக்கு கோவில் கட்டி தந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறி கோவில் கெட்ட அனுமதி வாங்கி., கோவில் கட்டும் சமயத்தில்., உங்களது மகள் உங்களின் இல்லத்தில் இருந்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறாது.
அவர் என்னுடைய பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து., அந்த நபர் அவரது மகளை சாமியாருடன் அனுப்பி வைக்கவே., சிறுமியை சுமார் ஒருவருடம் இவரது பிடியில் வைத்துவிட்டு 19 வயது ஆனதும்., உங்களின் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் மற்றும் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இளம்பெண்ணை கடத்தி சென்று ஓங்கூரில் வைத்து பலாத்காரம் செய்து., இது குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனையடுத்து இது குறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவலானது வெளிவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில் தற்போது வெளியான தகவலின் படி விழுப்புரம்., சேலம்., புதுச்சேரி., காஞ்சிபுரம்., நாமக்கல்., தருமபுரி., கடலூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் அவர்களின் குறையை தீர்க்க சொல்லி வந்த நிலையில்., உங்களுக்கு பில்லி., சூனியம் வைத்திருக்கிறார்கள் என்று கூறி., பூஜைக்கு கலந்து கொள்ள கூறி அந்த நேரத்தில் அவர்கள் மயக்கி பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இந்த பலாத்கார சம்பவங்களுக்கு இவனுக்கு உடந்தையாக மதுரையை சார்ந்த ஹேமா என்ற பெண்ணும் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை மயக்கி., கணவர்களிடம் இருந்து பிரித்து சில நாட்கள் அந்த பெண்ணை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த நிலையில்., மீண்டும் அந்த பெண்ணை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணை மயக்கி இது போன்ற தொடர் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாத வகையில் காலையில் நல்ல மனிதரை போல வளம் வந்து பின்னர்., இரவு வேளைகளில் முகத்தில் தாடி மற்றும் மீசையை ஒட்டிக்கொண்டு சாமியார் போல சுற்றித்திரிந்து வந்துள்ளான். தற்போது வரை மேற்கொண்ட விசாரணையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து வந்த நிலையில்., அவர்களிடம் இருந்து பணம் பறித்து சொகுசு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளான்.
இவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சமர்பித்ததை அடுத்து., நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலி சாமியார் மணி மற்றும் ஹேமா கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வராத நிலையில்., தற்போது இந்த பெரும் துயர சம்பவத்தின் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும்., முகத்தில் தாடி கூட முளைக்காமல்., ஒட்டு தாடியை வைத்து கொண்டு., பல ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வந்துள்ளான். பல திருமணம் முடிந்த பெண்களையும்., இளம் பெண்களையும் சீரழித்ததும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






