நீண்ட கால அவப்பெயரை துடைத்தெறிந்த தல தோனி.!!

உலக கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல் ராகுல் மற்றும் தோனி இருவரின் அதிரடி சதத்தால் 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவிந்தது. அடுத்து 360 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனால் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தல தோனி அதிரடியாக விளையாடி 70 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகளும், 07 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியின் தல தோனி அடித்த சதம் அவருக்கு மிக முக்கியமானதாகும்.

நீண்டகாலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி இதுவரை ஆசிய கண்டத்துக்கு வெளியே சதம் அடித்ததில்லை. நேற்று அடித்த சதம் தான் அவரின் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் அவரது தோனி அடித்த சதம் ஆகும்.

தோனி மீதான நீண்டகாலமாக வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.