நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக திமுக சார்பில், தனுஷ் எம். குமார் களமிறக்கப்பட்டார்.
தேர்தல் முடிவுகளின் போது கிருஷ்ணசாமிக்கும் தனுஷ் எம். குமாருக்கும் போட்டி நிலவியது. இறுதியில் தனுஷ் எம்.குமார், 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கிருஷ்ணசாமி இன்று வாக்காளருக்கு நன்றி தெரிவிக்க செய்தியாளர் சந்திப்பு வைத்தார். அப்போது தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்கள் தொடர்ந்து தோல்வி குறித்து பல கேள்விகளை முன்வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி செய்தியாளரை ஒருமையில் பேச தொடங்கினார். மேலும் செய்தியாளர்களை மிரட்டும் பாணியில், நீ எந்த ஊர்? நீ எந்த சாதி? உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீ வெளியே போ என்று கூறி செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.






