கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு பகுதி முருகன் கோவில் தெருவை சார்ந்த பகுதியில்., காலை 6 மணிக்கு அங்குள்ள மக்கள் நடைபயிற்சி சென்ற நேரத்தில்., சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர். இந்தச் சமயத்தில்., தனது குழந்தையை காணவில்லை என்று கூறி அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தேடிக்கொண்டிருந்தார்.
இதனை அறிந்த காவல்துறையினர் காணாமல் போன குழந்தையை மீட்டு எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி நிலையில்., காணாமல் போன குழந்தை இந்த குழந்தையா? என்று கேட்டனர். அந்த சமயத்தில்., இது தான் தன்னுடைய குழந்தை என்று கூறி கதறி அழுதுள்ளார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., தனது குழந்தையை கள்ளக்காதலன் அவரது பாட்டி வீட்டில் விட்டு வருவதாக அழைத்துச் சென்று பின்னர் இருவரையும் காணவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு சந்தேகித்த காவல்துறையினர்., அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட தீவிர விசாரணையில்., குழந்தையை கொன்று புதரில் வீசியது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில்., கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ரோகிணி (வயது 30).
இவருடைய கணவரின் பெயர் பால்ராஜ்., இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., மூன்று வயதுடைய பெண் குழந்தை உள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்., குழந்தை தேவிஸ்ரீ தாயுடன் வசித்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில் திரைப்பட படப்பிடிப்பு குழுவுக்கு தொழிலாளர்களை அனுப்பும் அதே பகுதியை சார்ந்த 36 வயதுடைய தமிழ் என்பவருக்கும்., ரூபினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த நேரத்தில்., தமிழ் இவருக்கு ஆறுதலாக வார்த்தைகள் பேசி நிலையில்., இவரது பேச்சில் மயங்கி உள்ளார். இதனால் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இவர்களின் கள்ளக்காதல் உல்லாசத்திற்கு குழந்தை இடையூறாக இருப்பதாக கருதி., குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி., சம்பவத்தன்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழந்தைக்கு விஷம் தடவிய பிஸ்கட்டை வழங்கி., எதனையும் அறியாத குழந்தை பிஸ்கட்டை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தை உயிர் இழந்ததும் தனது கள்ளக்காதலியிடம் குழந்தையை கொடுத்து எங்காவது சென்று வீசிவிட்டு வருமாறு கூறிய நிலையில்., கள்ளக்காதலன் அங்கு உள்ள பகுதியில் புதரில் வீசி விட்டு வந்துள்ளான். தற்போது காவல்துறையினரின் விசாரணையில்., இந்த தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தப்பியோடிய கள்ளகாதலன் தமிழை காவல்துறையினர் கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







