நடுராத்திரியில், நட்சத்திர ஹோட்டலில் ராஜா ராணி செம்பாவிற்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.!

தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவி சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். இவ்வாறு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்தில் கதாநாயகராக நடித்து வருபவர் சஞ்சய்.இவருக்கு ஜோடியாக ஆலியா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ரீல் ஜோடியான இருவரும் தற்போது தங்களது நிஜவாழ்க்கையிலும் ஜோடி சேர உள்ளனர்.

மேலும் விருது வழங்கும் விழாவில் ஆலியா மற்றும் சஞ்சய் இருவருக்கும் விஜய் தொலைக்காட்சியே நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆலியா அவ்வப்போது சஞ்சய் உடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று ராஜா ராணி ஆலியா மானசா தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது காதலன் சஞ்சய் அசத்தலான திட்டம் ஒன்றை வெளிநாட்டு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து தெரிந்ததும் ஆர்வத்துடன் ஹோட்டல் அறையை திறந்து பார்த்த ஆலியா அறையின் உள்ளே பார்த்ததும் பெரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

இந்த வீடியோவை சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் ராஜா ராணி செம்பா விற்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.