தமிழில் அவசர போலீஸ்100, என்றும் அன்புடன், என் ஆசை மச்சான், சதிலீலாவதி, ஆசை, மூவேந்தர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை மோனிகா. அதனை தொடர்ந்து அவர் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற அழகி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்
அதனை தொடர்ந்து நடிகை மோனிகா பகவதி, சண்டக்கோழி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அ ஆ இ ஈ, முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கொஞ்சும் மொழியால் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமான நடிகை மோனிகா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் தனது பெயரை எம் ஜி ரஹீமா என மாற்றி கொண்டார்.ஆணை தொடர்ந்து அவர் நடிகையாக இருந்து கொண்டு வெளியே செல்லும் போது ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரமமாக உள்ளது எனக்கூறி பர்தா அணியத் தொடங்கினார்.
பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு நடிகை மோனிகா மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து முழுவதும் விலகிய நிலையில், மாலிக்கை திருமணம் செய்து கொள்வதற்காகதான் நடிகை மோனிகா மதம் மாறியுள்ளார் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் புர்கா அணிந்து முற்றிலும் மாறிய நிலையில் இருக்கும் தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.






