இந்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் பல விதமான துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அபரீதமான தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்து கொண்டு வருகிறோம். என்னதான் இன்றுள்ள சூழ்நிலையில் பல விதமான பொருட்களின் தயாரிப்பில் பல சாதனைகளை புரிந்து வந்தாலும்., சில கண்டுபிடிப்புகள் நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மெதுவாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.
அவ்வாறு நமது மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த பொருட்கள் பல இருந்தாலும்., நமது சுற்றுப்புற சூழ்நிலையிலும்., நமது வாழ்வியலிலும்., நம்மிடமும் பல பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளில் முக்கிய பொருளாக பிளாஸ்டிக் உள்ளது. இந்த பிளாஸ்டிக்கில் ஒரு முறை உபயோகம் செய்யும் நெகிழி., பல முறை உபயோகம் செய்யும் நெகிழி என்று பல விதமான படைப்புகள் உள்ளது. அவ்வாறு இந்த நெகிழியை உபயோகம் செய்யும் நாம்., அதனை மறுசுழற்சி செய்யாமல் தீயிட்டு கொளுத்தியும்., கடல்களில் கொட்டியும் வருகிறோம்.
இதனால் பல உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்ததையும்., நமது உடலில் ஏற்பட்ட பிரச்சனையும் நாம் அறிவோம். இதில் இருந்து விலக்கம் அடைவதற்கு அந்தந்த நாடுகளின் அரசுகள் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்., பெரும்பாலான வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களே உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில்., தாய்லாந்து நாட்டில் உள்ள காய்கறி வணிக அங்காடியில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக வாழை இலைகளை பயன்படுத்தியுள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டில் உள்ள சியாங்மை பகுதியில் இருக்கும் ரிம்மிங் என்ற சூப்பர் மார்க்கெட்டில் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் கேட்ட போது., இந்த உலகில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாம் பல விதமான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இதனால் சுற்றுப்புற சூழலிலும் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டு., அதன் தாக்கத்தையே நாம் அனுபவித்து வருகிறோம்.
இதன் காரணமாக ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகளை கணக்கில் கொண்டு., காய்கறிகள் மற்றும் பிற பொருட்களை வாழையிலைகளில் வைத்து கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து தற்போது செயல்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக காய்கறிகளின் நன்மையும்., வாழையிலையின் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. இதனால் பிளாஸ்டிக் உபயோகம் வெகுவாக குறைகிறது. தேவையான பொருட்களை தேவையான அளவில் பேக்கிங் செய்து கொடுக்க இது வழிவகை செய்கிறது என்று தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதார துறையானது 2050 ம் வருடத்தில் நிலம் மற்றும் கடலை சூழ்ந்து பிளாஸ்டிக்கானது பரவியிருக்கும். இந்த நிலையை மாற்ற நாம் இயற்கையான பொருட்களை உபயோகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.






