அடுத்தது ரஜினி தான்.. நாம் தமிழர் தயராக இருக்கிறது: சீமான் சூளுரை

இந்தியாவில் பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைக்க உள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டு என்ன நடக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்து ஐந்து ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் அனைவரும் பயத்தில் இருக்கின்றனர். அடுத்த ஐந்து ஆண்டு எப்படி கடக்கப்போகிறோம் என நம்மாலே யோசிக்க முடியவில்லை.

அடுத்தது எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தை பாஜகவினர் நிறுத்துவார்கள். குருமூர்த்தி தான் ரஜினிக்கு அரசியல் ஆலோசகர். மறுபடியும் இதே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து பாஜக மத்திய அதிகாரத்தை பயன்படுத்தி வேலை செய்யும்.

இவர்களை நாம் தமிழர் கட்டாயமாக எதிர்கொள்ளும், வலிமை என்பது படை பலம் இல்லை ஆண்மை பலம் தான் என சீமான் தெரிவித்துள்ளார்.