மீண்டும் ஒன்று சேரும் கவுண்டமணி, செந்தில் கூட்டணி.!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான, மேலும் பலருக்கும் பிடித்த காமெடி கூட்டணி என்றால் நடிகர் கவுண்டமணி, செந்தில் கூட்டணி தான். இவர்களது கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும்.

பல படங்களில் இவர்களது காமெடி காட்சிகளாகவே ஓடி உள்ளது. இந்த வகையில் இவர்களது காமெடி கூட்டணியில் உருவாகிய மெகா ஹிட் ஆன திரைப்படங்களில் ஒன்று கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.

இப்படத்தில் இடம்பெற்ற வாழைப்பழம் காமெடி காட்சிகள், தற்போது உள்ள ரசிகர்கள் விரும்பப்படக் கூடிய காட்சிகளாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் கங்கை அமரன் முடிவு செய்துள்ளதாகவும் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கவுண்டமணி படத்தில் பாட்டு வைத்தியராகவும், செந்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவப்போவது போலவும் இக்கதையை வடிவமைக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.