மோடி பதவியேற்பு விழா எப்போது?! வெளியான தகவல்!

மக்களவை தேர்தல் தேர்தலில் பாஜக 342 அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 282 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது

மக்களவை தேர்தலில் 1984க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையையும் பாஜக இந்த தேர்தலில் பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி எப்போது பதவி ஏற்க போகிறார் என்ற தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது

இந்த நிலையில், மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, வருகின்ற 30 ஆம் தேதி மாலை 7 மணிக்கு டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது. அன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைப்பார் அதிகாரவப்பூர்வமாக அறிவித்தது ஜனாதிபதி மாளிகை.