பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி ஈராக் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட நிலையில், மூவருக்கும் மரண தண்டனை வழங்கியுள்ளதாக ஈராக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவில் வைத்து ஜிகாதிகளுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு படைகளால், 12 பிரான்ஸ் ஜிகாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிரான்ஸ் ஜிகாதிகள் விசாரணைக்காக ஈராக் கொண்டு செல்லப்பட்டனர்.
12 பேரில் கெவின் கோனட், லியோனார்டு லோபஸ் மற்றும் சலிம் மச்சோ ஆகிய மூவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை பெறும் முதல் பிரான்ஸ் ஐ.எஸ் ஜிகாதிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூவருக்கும் மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.






