இந்திய பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி கோவிலுக்குள் காலணியுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.
சமீபத்தில் கேதார்நாத் சென்றிருந்த மோடி, மே 18ம் திகதி தான் கேதார்நாத்தில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில், மோடி காலணியுடன் கோவிலுக்குள் இருப்பதாக புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கினர்.
பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில், கோவிலுக்குள் மோடி காலாணியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாக, அவரை பலர் கடுமையாக விமர்சித்தனர்.
இதனையடுத்து, இதற்கு முடிவுகட்டும் வகையில் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வௌியிட்டார். அதில், முதல் படத்தில் மோடி கோவிலுக்கு வெளியே காலாணியுடன் நின்று வணங்கிறார்.
இரண்டாவது படத்தில் சாக்ஸ் அணிந்த படி கோவிலுக்குள் நிற்கிறார். இதனையடுத்து, இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.









