சிவந்த சருமம் பெற வேண்டுமா?

முக அழகை அதிகரிக்க என்ன தான் செயற்கை பொருட்களை பயன்படுத்தினாலும் அது எப்போழுதுமே நிரந்த தீர்வினை தராது.

இருப்பினும் இயற்கை முறை மூலம் இயற்கை அழகினை பெற முடியும். அதில் பாதாமும் ஒன்றாகும்.

பாதாமில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களை சீர் செய்து, போஷாக்கு அளிக்கும்.

தற்போது பாதமை வைத்து எப்படி முகத்தின் அழகை மெருகூட்டுவது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • பாதாம் – 3-4
  • பால்- 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

முதலில் பாதாமை இரவினில் ஊற வையுங்கள். மறு நாள் அதனை அரைத்து கெள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் போலாக்குங்கள்.

இப்போது இந்த கலவையினை முகத்திலும் கழுத்திலும் தேய்த்து இதமாக மசாஜ் செய்யுங்கள்.

ஒரு 20 நிமிடங்கள் காய விடவும். பின் குளிர்ந்த நீரினால் கழுவலாம்.

வாரம் ஒரு முறை செய்தால்,முகம் மாசு மருவின்றி ஜொலிக்கும். நிறம் கூடும்.மிருதுவாய் மாறும். மாற்றத்தை உணர செய்து பாருங்கள்.

பால் சிறந்த மாய்ஸ்ரைஸர் ஆகும். வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கிறது. எலுமிச்சை சாறு இயற்கை ப்ளீச் தருகிறது. வெயிலினால் பாதிப்படைந்த சருமத்தில் உண்டான கருமையை அகற்றி நிறத்தினைக் கூட்டுகிறது.