இணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம்!

தெரு விளக்கில் அமர்ந்து படித்து கொண்டிருக்கும் சிறுவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானதை அடுத்து, மில்லியனர் ஒருவர் அந்த சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார்.

பெரு நாட்டை சேர்ந்த விக்டர் மார்ட்டின் என்கிற 11 வயது சிறுவன், வீட்டில் மின்சார வசதி இல்லாததால், தெரு ஓரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்துள்ளான்.

இந்த புகைப்படமானது உலகளவில் உள்ள மில்லியன் கணக்கிலான இணையதளவாசிகளால் வைரலாக்கப்பட்டதை அடுத்து, பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மில்லியனர் உதவ முன்வந்துள்ளார்.

சிறுவனின் புகைப்படத்தை பார்த்த 31 வயதான யாகூப் யூசுஃப் அஹ்மத் முபாரக் என்கிற மில்லியனர், தன்னுடைய நாட்டிலிருந்து பெரு நாட்டிற்கு சென்று சிறுவனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அங்கு சிறுவனை சந்தித்த அவர், இரண்டு மாடி வீடு மற்றும் அவனுடைய தாய்க்கு ஒரு வேலை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், சிதைத்திருக்கும் அவனுடைய பள்ளியையும் கட்டி கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நானும் சிறுவயதில் இதுபோன்று அனுபவித்துள்ளேன். விக்டரின் தாயாருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுப்பதன் மூலம், அதில் வரும் வருமானம் சிறுவனின் எதிர்கால வாழ்க்கை மற்றும் படிப்பிற்கு உதவும் என தெரிவித்துள்ளார்.

தனக்கு உதவ முன்வந்துள்ள முபாரக்கிற்கு நன்றி தெரிவித்துள்ள விக்டர், தற்போது பெரும் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்திலும் இருப்பதாக அவனுடைய தாய் கூறியுள்ளார்.