முதலமைச்சரின் மகனை தோற்கடித்த தமிழ் சினிமா நடிகை!!

கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. மக்களவை தேர்தல் முடிவுகளின் படி பாஜக கூட்டணி 351 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 92, மற்றவை 99இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளன.

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார். நடிகை சுமலதா தமிழ் சினிமாவில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடா மண்டியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை தோற்கடித்து மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதா மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

ஆனால் அந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ் ஆதரவாளர்கள் தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர். இந்தநிலையில் தற்போது மண்டியா மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்றில் நடிகை சுமலதா அதிக வாக்குகள் பெற்று நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.