தலை சிறந்த கேப்டன் இவர்தான்.! விராட் கோலிக்கு இடமில்லை.!!

12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது.

இந்நிலையில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3வது உலகக் கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

உலக கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் அதன் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. உலககோப்பை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ரசிகர்கள் அந்த கிரிக்கெட் திருவிழாவை காண ஆவலுடன் உள்ளனர்.

இதுவரை நடந்த அனைத்து உலக கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணி வைத்து சிறப்பான அணியை (ஆல்டைம் பெஸ்ட் லெவன்) ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. ஆல்டைம் உலக கோப்பை உலக அணிக்கு கபில்தேவ் கேப்டனாக உள்ளார், துணை கேப்டனாக தோனி உள்ளார், 11 பேர் கொண்ட அந்த அணியின் விராட் கோலிக்கு இடமில்லை. விராட் கோலி இரண்டு உலகக்கோப்பை ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.