சந்திரபாபு நாயுடு !! அடிமடியில் வெடிவைத்த பரிதாபம்!!

மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைப்பதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியும், பாஜகவை எதிர்க்கும் சில மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. இதன் முதற்கட்டமாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில கட்சிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க வைக்க, கடந்த மாதம் முதல் அனைத்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவரை தொடர்ந்து இதில், தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் கட்சியின் தலைவரான சந்திரசேகராவ் வும் மற்றொரு அணியை அமைக்க திட்டம் தீட்டி வந்தார்.

இன்று நாடுமுழுதும் நடத்தப்பட்ட பாராளுமனற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியானது சட்டப்பேரவை தொகுதிகளில், தெலுங்கு தேசம் கட்சியினை பின்தள்ளி முன்னிலையில் இருக்கிறது. எனவே, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரான ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை பின்னுக்கு தள்ளி முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டாட்சி முறையில் ஆட்சிக்கு வர துடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு கடைசியில் முதல்வர் பதவியும் பறிபோனது பரிதாபத்திற்கு உள்ளானது.