ஸ்டாலின்: வெற்றிக்கு பின் தலை வணங்கினார்!

இந்தியளவில் பாஜக ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் திமுக-விற்கு முன் வாஸ் அவுட் ஆனது.

39 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக வேட்பாளர்கள் ஒருவர் கூட முன்னிலையில் இல்லை. 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் தமிழக மக்கள் அளித்த ஆதரவு குறித்த திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்! என பதிவிட்டுள்ளார்.