இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரியாத நபர்கள் என்பதை விட., நன்றாக தெரிந்த மற்றும் உடன் பழகிய நபர்களாலேயே என்ற செய்தியானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்., ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகளுக்கு கூட பாலியல் தொல்லைகள் வழங்கப்பட்டு வரும் நிலையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வரும் சூழலில்., கடந்த ஒரு வாரத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., உறவினரின் இல்லத் திருமண விழாவிற்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுமையை இளைஞர்கள் மூவர் சேர்ந்த சீரழித்துள்ள சம்பவமானது தற்போது அரங்கேறியுள்ளது.
இன்றுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக அலைபேசி மற்றும் இணையமானது உள்ளது. இந்த இணையம் மூலமாக நமக்கு தேவையான பல நல்ல விஷயங்களை அறிந்து கொண்டாலும்., தேவையற்ற பல ஆபாச இணையத்தை காணும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று காம கொடூரர்களால் பல துயர சம்பவங்கள் அரங்கேறியதை அடுத்து., அதனை போன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகேரி குர்த் என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சிறுமி தனது பெற்றோர்களுடன் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கிருந்த அவரது உறவினர்களான சிறுவர்கள்., சிறுமியை ஏமாற்றி அங்குள்ள தனிமை இடத்திற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த கொடிய அரக்கன்களின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி., தனது உறவினர்களிடம் கூறி கதறியழுத்துள்ளார். மேலும்., அலைபேசியில் ஆபாச படங்களை பார்த்தவாறு சிறுமியை சீரழித்து., கொடூர முறையில் சீரழித்துள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் அவர்கள் மூவரையும் பிடித்து அடிக்க துவங்கிய நிலையில்., இருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில்., ஒருவன் சம்பவ இடத்திலேயே அடி தாங்க இயலாமல் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துரையினர் தப்பியோடிய சிறுவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில்., ஒரே வாரத்தில் அங்குள்ள பகுதியில் சுமார் மூன்று பாலியல் பலாத்காரங்கள் அரங்கேறியுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.






