ஆந்திராவை சேர்ந்தவர் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி. இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின்மூலம் அறிமுகமானார்.
மேலும் முதல் ஆட்டதிலேயே அவர் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.அதனை தொடர்ந்து ஹனுமா விஹாரி கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடினார்.
இந்த நிலையில் ஹனுமா விஹாரி அழகுக்கலை நிபுணருமான பிரீத்திராஜ் எருவா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
இதனை தொடர்ந்து அவர் தனது காதலியை நேற்று திருமணம் செய்துகொண்டார். மேலும் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் தனது திருமண புகைப்படத்தை ஹனுமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் உன் முகத்தில் இருக்கும் இந்த புன்னகை எப்பொழுதும் தொடரும் என உறுதியளிக்கிறேன். ஐ லவ் யு எனவும் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram






