வீட்டில் இருந்து அலறியபடி வந்த மாணவி.! சிக்கிய வங்கி மேலாளர் என்ற போர்வையில் காம கொடூரன்.!!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரியாத நபர்கள் என்பதை விட., நன்றாக தெரிந்த மற்றும் உடன் பழகிய நபர்களாலேயே என்ற செய்தியானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில்., ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகளுக்கு கூட பாலியல் தொல்லைகள் வழங்கப்பட்டு வரும் நிலையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வரும் சூழலில்., தற்போது சிவகங்கை பகுதியில் அரங்கேறியுள்ள சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகேயுள்ள மானகிரி பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவனின் பெயர் ரவிச்சந்திரன். இவன் அங்குள்ள வைரவபுரம் பகுதியில் வசித்து வருகிறான். இதே வைரவபுரம் பகுதியில் 15 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவர் அங்குள்ள பகுதியில் இருக்கும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில்., மாணவியை இன்று காலையில் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயற்ச்சித்துள்ளான். நல்ல வேலையாக இவனது பிடியில் இருந்து தப்பிய மாணவி., வீட்டை விட்டு அலறியபடியே வெளியேறிய நிலையில்., இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர்.

அந்த சமயத்தில்., மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் வீட்டிற்குள் அழைத்து சென்று அத்துமீற முயன்றது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., ரவிச்சந்திரனை நன்றாக அடித்து நொறுக்கினர். இந்த நொறுக்கலில் சிக்கிய ரவிச்சந்திரனின் முகங்கள் உடைக்கப்பட்டு., ஆத்திரம் தீர்ந்தவுடன் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொடூரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.