சர்வதேச எல்லையில் அத்துமீறி நுழைந்த படகு.! கடற்படை அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

இந்திய கடலோர காவல் துறையினர் சர்வதேச எல்லை பகுதிகளில்., பிற நாட்டவரின் அத்துமீறிய நுழைவுகளை குறைப்பதற்கு., அதிதீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த சமயத்தில் எல்லை தாண்டி அல்லது பிற காரணத்தால் எல்லையை தாண்டும் பிற நாட்டவரை கண்காணிப்பதும்., அந்த கண்காணிப்பில் ஏதேனும் போதை பொருட்கள் கடத்தப்படுவது கண்டறியப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

இந்திய எல்லை பகுதிகளில் அவ்வப்போது மீன் பிடி படகுகளின் மூலமாக போதை பொருட்கள் கடத்தல்., பயங்கரவாதிகள் ஊடுருவல் போன்ற செயல்கள் நடந்து வருவதால்., கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலயில்., சர்வதேச எல்லை பகுதியில் இருந்து இந்திய கடற்பகுதிக்குள் படகு ஒன்று நுழைவதை கடற்படை அதிகாரிகள் கண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கண்காணிப்பு காவல் துறையினர்., அந்த படகை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சமயத்தில்., அந்த படகில் சுமார் 194 பாக்கெட்டுகளில் போதை பொருட்கள் இருப்பதை கண்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., படகு மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி., படகில் இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.