சென்னை மையிலாப்பூரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மெரினா கடற்கரையில் பானிபூரி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தந்து 7 வயது மகனான பிரணவ் என்ற சிறுவனை மெரினா கடற்கரைக்கு அழைத்துச்சென்றுள்ளார். சிறுவன் மெரினா கடற்கரை மணலில் ஓடி ஆடி விளையாடி உள்ளான்.
மெரினா கடற்கரையில் பிரகாஷ் என்பவர் குழந்தைகளை மகிழ்விக்கும் ராட்டினம் இயக்கும் தொழிலை செய்துவந்துள்ளார். ராட்டினத்தில் ஏராளமான குழந்தைகள் கூச்சல் சத்தம் போட்டபடி விளையாடி கொண்டிருந்தனர். அவர்கள் போட்ட சத்தம் சிறுவனை ரட்ணத்தை நோக்கி ஈர்த்தது.
இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில், சிறுவன் கடற்கரையில் ராட்டினம் சுற்றுவதை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் ராட்டினம் அருகே சென்றுள்ளான். திடீரென ராட்டினத்தின் கம்பி, சிறுவனின் தலையில் பலமாக தாக்கியதில் சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், சிறுவன் பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காவல் துறையினர் ராட்டினம் இயக்கிய பிரகாஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரையில் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் பாடமாய் அமைந்துள்ளது. தனது 7 வயது மகனை இழந்த பத்மநாபன் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்.