மண்டை குழம்பி நோயாளியாக மாறிய ஜெயம் ரவி.!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ரவி. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், நிமிர்ந்து நில், பேராண்மை, தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், அடங்க மறு என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயம்ரவி தனது 24 படமாக கோமாளி என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரதீப் ரங்கராஜன் இயக்குகிறார்.மேலும் இப்படத்தில் முதல் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். அவர்களுடன் சம்யுக்தா ஹெக்டே , கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து படம் வெளியிடுவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இதில் உடல் எடை குறைந்த நிலையில் ஜெயம்ரவியின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.