உலகப் புகழ்பெற்ற கிரம்பி பூனை திடீர் மரணம்!

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நட்சித்திரமாக விளங்கிய கிரம்பி பூனை திட்டிரென்று மரணமடைந்ததாக அதன் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

உணர்ச்சியை வெளிக்காட்டாத முகபாவம் கொண்ட இந்த பூனை இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான மீம்ஸ்களுக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

7 வயதான இந்த பூனைக்கு சமீப காலமாக சிறுநீர் தொடர்பான உபத்திரவம் இருந்து வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.4 மில்லியன் ஆதரவாளர்களை கொண்ட இந்த பூனையானது அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் குடியிருந்து வருகிறது.

2012 ஆம் ஆண்டு இதன் உரிமையாளர் பிரயான் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் மட்டும் 1 மில்லியன் பார்வையாளர்கள் அந்த புகைப்படத்தை பார்வையிட்டுள்ளனர்.

தொடர்ந்து அதன் புகழ் உச்சத்துக்கு சென்றுள்ளது. மட்டுமின்றி உலகம் முழுவதும் அடையாளம் காணப்படும் பூனையாகவும் அது மாறியது.

இதனையடுத்து கிரம்பி பூனை ஒரு முழு நீள திரைப்படத்திலும் நடித்து புகழின் உச்சிக்கு சென்றது. 4 வயதாக இருக்கும்போது கிரம்பி பூனையின் சொத்துமதிப்பு 64 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

முதல் தர விமான பயணம் மட்டுமே அதன்பின்னர் கிரம்பி பூனை மேற்கொண்டுள்ளது. மட்டுமின்றி நகரின் மிகவும் சிறந்த ஹொட்டல்களில் மட்டுமே தங்கியுள்ளது.

உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகபாவம் கொண்ட பூனையாக அறியப்பட்டாலும், மிகவும் மகிழ்ச்சியான பூனை இதுவென பிரயான் தெரிவித்துள்ளார்.