கைது செய்யப்பட்ட 80 பேர்!! அதிர்ச்சி காரணம்!!

நைஜீரியாவில் 80 பேர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ரமலான் நோன்பு கால நேரத்தில் உணவு உண்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆபிரிக்காவில் உள்ள மேற்கு நாடுகளில் ஒன்று நைஜீரியா இந்த நாட்டில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சம அளவில் வசித்து வருகின்றனர்.

சிரியாவின் வட பகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடைபெறுகிறது. அந்த பகுதியில் பொது இடத்தில் சுமார் 80 பேர் உணவு உண்டுள்ளனர். இதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ரமலான் நோன்பு காலம் என்பதால் அவர்கள் இஸ்லாமிய விதியை மீறி உணவு சாப்பிட்டீர்கள் என போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் போலீசார் காவலில் வைத்து எச்சரித்து அதன் பின்னர் விடுவித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகின்றது. இதில் கைதான அனைவரும் முதல் முறை கைதானவர்கள் என்பதால் போலீசார் எச்சரிக்கை செய்வதோடு அனுப்பியுள்ளனர்.

ஆனால், இதே தவறை மீண்டும் அவர்கள் செய்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர். நைஜீரியாவில் ‘ஷரியத்’ சட்ட திட்டங்களை மீறி செயல்படுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க ஹிஸ்பா எனப்படும் தனிப்படை போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விதிகளை மீறும் இஸ்லாமியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற மதத்தினரை இவர்கள் பொருட்படுத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.