தமிழ் சினிமாவின் இளம் நடன இயக்குனர்களில் ஒருவர் பரத். இவர் விருகம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி வருகிறார், மின்சார கனவுகள் என்ற படத்தில் கூட ஹீரோவாக நடித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் அவர்களின் நடன குழுவில் உள்ளார்.
35 வயதான இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, இந்த நேரத்தில் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரின் மரண செய்தி அவரது நண்பர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியை அளித்துள்ளது. வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் பரத் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.






