தீவிரவாதத்தை பற்றி பேசிய கமலை கண்டித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்..

கடந்த ஒரு வாரகாலமாக அரசியலில் கமல் பேசிய சர்ச்சை வார்த்தைதான் இந்தியா முழுவதும் வைரலாகிவருகிறது. சுதந்திர இந்தியாவின் தீவிரவாதி இந்து நபர் என கூறிய கமலுக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறை பிரபலங்களும் விமர்சித்தும், ஆதரவாகவும் பேசிவருகிறார்கள்.

கைத்தட்டலுக்கும் மறைமுக கருத்துக்கும் இப்படியான சர்ச்சை பேச்சுக்களை எந்த தலைவர்களும் பேசக்கூடாது என்றும், ஒழுக்கமில்லாத வார்த்தைகள், பிரிவினையை உண்டாக்கும் கருத்துக்களும் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கமல் பேசிய சர்ச்சை பேச்சிற்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் கூறிய அவர், ஒரு தீவிரவாதியின் மதத்தை ஆராய வேண்டிய அவசியம் இல்லை, தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசவேண்டாம்.