தென்னிலங்கையிலுள்ள பிரதேச சபை ஒன்றுக்குள் வாளுடன் பிரவேசித்த உறுப்பினர் ஒருவரால் சற்று நேரம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் காலி இமத்துவ பிரதேச சபை அமர்வின்போதே இடம்பெற்றுள்ளது. இதனால் சபை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் சபையில் குழப்பமும் நீடித்துள்ளது.
குறித்த வாளைக் கொண்டுவந்தவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ரேணுகாதேவி என கூறப்பட்டுள்ளது.
தற்பாதுகாப்பிற்காக வாள்கள் வைத்திருப்பதாக கூறப்படுவதாலேயே தான் அதனைக் கொண்டுவந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் சபை உறுப்பினர்களின் எதிர்ப்பையடுத்து சபை முதல்வர் அந்த வாளைப் பெற்று வெளியில் கொண்டுபோகுமாறு பணித்தார்.